• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிருக்கு அச்சுறுத்தல்... வெளிநாட்டில் வாழும் ஐரோப்பிய நாடொன்றின் பட்டத்து இளவரசி 

நெதர்லாந்தின் பட்டத்து இளவரசிக்கு எதிராக தீவிர அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக நெதர்லாந்தின் பட்டத்து இளவரசி அமலியா மாட்ரிட் நகரில் கல்வியை முடித்தார். ஆம்ஸ்டர்டாம் நகரில் கல்வி பயின்று வந்த நிலையில் 2022ல் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே அவர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் கல்வியை தொடர்ந்தார். ஸ்பெயின் நாட்டில் அவர் தங்கியிருப்பது தொடர்பான தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே நெதர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டாமில் அவர் கல்வி பயின்ற போது உள்ளூர் ஊடகங்களால் அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மட்டுமின்றி, 2022 அக்டோபர் மாதம் குற்றவியல் குழு ஒன்றால் பட்டத்து இளவரசி அமலியா கடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலும் வெளியானது.

இதனையடுத்து இளவரசி மற்றும் பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சக மாணவிகள் போல, தமது மகளும் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் உள்ளது என்று அப்போது ராணியார் மாக்சிமா கவலை தெரிவித்திருந்தார்.

2023 பிப்ரவரி மாதம் கரீபியன் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட ராணியார் மாக்சிமா உடன் இணைந்த இளவரசி அமலியா, சாதாரண மாணவர்களுக்கான சுதந்திரம் தாம் அனுபவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் அவர் ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வயதாகும் இளவரசி அமலியா, தமது தாயார் போன்று சரளமாக ஸ்பானிய மொழி பேசுவதாகவும் கூறப்படுகிறது.
 

Leave a Reply