• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபரான டச்சஸ் ஆஃப் எடின்பர்க்

டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் உக்ரைனுக்கு சென்றதன் மூலம், ரஷ்ய படையெடுப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஆனார். அரச குடும்பத்தைச் சேர்ந்த டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் (Sophie Helen) உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
  
தனது பயணத்தின்போது அவர், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனின் முதல் பெண்மணியான ஓலேனா ஜெலென்ஸ்காவை (Olena Zelenska) சந்தித்தார்.

பின்னர் கீவ் நகரில் அமைந்துள்ள Saint Sophia Cathedral அருங்காட்சியகத்தை ஓலேனாவுடன் இணைந்து சோஃபி ஹெலன் பார்வையிட்டார். அவர் இத்தாலிய பிரண்டான Etroவின் 1,251 பவுண்டுகள் மதிப்பிலான உடையில் காட்சியளித்தார்.

மோதல்கள் மற்றும் சமூகத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த உக்ரேனிய பெண்களுக்கு சோஃபி தனது ஆதரவைக் காட்ட ஆர்வமாக இருந்தார்.

மேலும், துஷ்பிரயோக வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு ஆதரவு, உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்பு பயனுள்ளதாகவும், நீண்ட காலம் நீடிக்கும் வகையில் முக்கியப் பங்கைக் கொண்ட பெண்கள் சமாதானத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது பற்றியும் விவாதித்தார்.

சோஃபி ஹெலன் இந்த பயணத்தின் மூலம், 2022யில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபர் எனும் பெயர் பெற்றுள்ளார். 
 

Leave a Reply