• Welcome to TamilsGuide
செய்திகள் 1

8 ஆண்டுகளாக புற்றுநோய்... வெளிநாட்டு லொட்டறியில் ரூ 130 கோடியை அள்ளிய புலம்பெயர் நபர்

அமெரிக்காவில் Powerball jackpot லொட்டறியில் இந்த மாதம் புலம்பெயர் நபர் ஒருவர் ரூ 130 கோடியை பரிசாக அள்ளியுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான Laos-ல் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர் தற்போது 46 வயதாகும் Cheng Saephan. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் Saephan கடந்த வாரம் தான் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். Portland பகுதியில் குடியிருந்து வரும் Saephan தெரிவிக்கையில்,

லொட்டறியில் தாம் வென்றுள்ள மொத்த பணத்தில் சரிபாதியை தமது நண்பரான 55 வயது Laiza Chao என்பவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாகாண வரிகளுக்குப் பிறகு சுமார் 422 மில்லியன் டொலர் தொகை Saephan குடும்பத்தினருக்கு கிடைக்க உள்ளது.

குறித்த பணத்தில் நல்ல சிகிச்சை முன்னெடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். Laos நாட்டில் பிறந்த Saephan 1987ல் தாய்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தொடர்ந்து 1994ல் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.

வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்திற்கு உதவிய தென்கிழக்கு ஆசிய இனக்குழுவை (Iu Mien) சார்ந்தவர் தாம் என Saephan தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.

போருக்கு பின்னர் ஆயிரக்கணக்கான அந்த இனக்குழுவினர் தாய்லாந்துக்கு தப்பியுள்ளனர். அதன் பின்னர் பெரும்பாலானோர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.

தற்போது பல்லாயிரக்கணக்கான Iu Mien மக்கள் மேற்கு கடற்கரையில் வாழ்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக Portland பகுதியில் Saephan குடியிருந்து வருகிறார்.

ஒரேகான் மாகாண விதிகளின் அடிப்படையில் லொட்டறியில் பரிசை வெல்பவர், தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்த வேண்டும். அத்துடன், வெற்றியாளர்கள் ஓராண்டுக்குள் பரிசை உரிமை கோரவேண்டும். ரூ 130 கோடி பரிசு என்பது நான்காவது பெரிய Powerball jackpot பரிசு என்றே கூறப்படுகிறது.
 

Leave a Reply