• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்த டி.எம்.எஸ் - கவிஞர் கொடுத்த பதில்

சினிமா

'வீடு வரை உறவு; வீதி வரை மனைவி': கண்ணதாசன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்த டி.எம்.எஸ்; கவிஞர் கொடுத்த பதில்

பட்டினத்தார் பாடலை நீங்கள் ஒழுங்காக காப்பியடிக்கவில்லை என கண்ணதாசன் பாடலில் குற்றம் கண்டுபிடித்த டி.எம்.எஸ்; கவிஞர் கொடுத்த விளக்கம் இதுதான்

பட்டினத்தார் பாடலை நீங்கள் ஒழுங்காக காப்பியடிக்கவில்லை என கண்ணதாசன் பாடலில் குற்றம் கண்டுபிடித்த டி.எம்.எஸ்; கவிஞர் கொடுத்த விளக்கம் இதுதான்

கவிஞர் கண்ணதாசன் பற்றிய நினைவுகளை மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.வி லெஜண்ட் என்ற யூடியூபில் வெளியாகியுள்ள வீடியோவில், கண்ணாதாசன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பாடல் எழுதக் கூடியவர் என டி.எம்.எஸ் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் டி.எம்.எஸ் தெரிவித்துள்ளதாவது; கண்ணதாசன் கஷ்டத்தில் இருந்த நேரத்தில், அண்ணனே உதவாத சமயத்தில் எழுதிய பாடல் தான் அண்ணன் என்னடா, தம்பி என்னடா பாடல்.

பின்னர் ஒரு சமயம், ஒரு பாடல் ரெக்கார்டிங் சமயத்தில் இயக்குனர் எனக்கு 5 முறை கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் பாடலை பாடிக் காட்டி பாடச் சொன்னார். ஆனால் நான் பாடவில்லை, உடனே அங்கிருந்த கண்ணதாசன், பாடுய்யா என்றார். நான் பாடலில் ஒரு டவுட் இருக்கு என்றேன். காரணம் கேட்க, இவன் முட்டாள்தனமாக காதலித்து ஏமாந்தால், கடவுள் என்ன செய்வார், அவர் ஏன் சாக வேண்டும், என்ன பாட முடியாது என்றேன். கடவுள் வாட வேண்டும் என்று மாற்றக் கூறினேன்.

அடுத்ததாக வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? இந்த பாடல் வரிகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பட்டினத்தார் பாடலை நீங்கள் ஒழுங்காக காப்பியடிக்கவில்லை, அவர் பாவம், புண்ணியம் கூட வரும் என்று எழுதியிருக்கிறார் என்று கூறினேன். அதற்கு கண்ணதாசன், கேள்வி சரிதான், பாவம், புண்ணியத்தை பற்றி பேச பட்டினத்தாருக்கு தகுதி உண்டு, கண்ணதாசனுக்கு இல்லை, நிறைய பாவம் செய்துக் கொண்டிருக்கிற நான் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என கண்ணதாசன் கூறினார். இப்படி பேச யாருக்கு தைரியம் வரும் என கண்ணதாசனை டி.எம்.எஸ் புகழ்ந்துள்ளார்.
 

Leave a Reply