• Welcome to TamilsGuide
செய்திகள் 1

RAY OF HOPE ஆதரவு கோரல்

சினிமா

தமிழ் தேசிய இனத்தின் அடையாளம், வரலாறு மற்றும் இன்றும் தொடரும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பு பற்றிய உண்மைகளை வாழும் சாட்சியங்களின் ஊடாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் பதிவான சாட்சியங்களின் ஊடாகவும் ஆவணமாக படமாக்கப்பட்டுள்ளது #RAYOFHOPE.https://rayofhopedoc.com/  இந்த ஆவணப்படத்தை உலகெங்கும் திரையிட முன்னோட்டமாக கனடா தமிழ் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும்“கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பால்”  MAY 5 இல் முன்னெடுக்கப்படுகின்றது.  ஆதரவு தந்து உதவுமாறு அன்புடன் உங்களை வேண்டுகின்றோம். 

கீழே உள்ள இணைப்பில் இத்திரைப்படம் தொடர்பான விபரக்கோர்வை இணைக்கப்பட்டுள்ளது.
 
 இருண்ட கண்டத்தின்; “நம்பிக்கை ஒளி”
“சிறீலங்கா அரசினால் தமிழர்கள் தங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சமாதனத்துடன் வளமாக வாழவேண்டும்”- யூன் 30.2009 இவ்வாறு நோபல் பரிசு பெற்றவரும் “நாசி” வதைமுகாமிலிருந்து தப்பியவருமான பேராசிரியர் எலைவைசல் (Professor Elie Wiesel) கூறியதை இத்தருணத்தில் நினைவுகூர்தல் சாலச் சிறப்பு. ஏனெனில் எலைவைசலின் அதேநோக்கோடு காயனா நாட்டினைச் சேர்ந்த கனடியத் தயாரிப்பாளரும் இயக்குனருமாகிய திரு. ராயன்சிங் சுயுலு ழுகு ர்ழுPநு எனும் ஆவணத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
மனிதரால் மனிதருக்குச் செய்யப்பட்ட “நாசி” வதைமுகாமிற்குப் பின்னர் “இனி ஒருபோதும் வேண்டாம்” என்று உறுதிபூண்ட மனிதகுலத்தின் கண்களின் முன்னாலேயே இந்த நவீன நவநாகரீக யுகத்திலும் காட்டு மிராண்டித் தனமான மிலேச்சத் தனமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகம் பார்த்துக் கொண்டிருக்க அரங்கேறியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் அந்த பாரிய மானிடப்பேரவலத்தை வீதிகளில் நின்று கதறகதற, தாயகத்தில் நம்மக்கள் அனுபவித்த வன்கொடுமை மரணத்தின்போதிலும் மறக்கமுடியாது. இன்றும் பாலஸ்தீனத்தில் அதேகாட்சிகள் கண்களில் படும்பொழுது (கைகால்கள் கண்கள் கட்டப்பட்டு மனிதர்களை சித்திரவதைப் படுத்தி சுட்டுக்கொல்லப்படும் காட்சி) நெஞ்சம் பதைபதைக்கின்றது. எங்கு மனிதப்பேரவலம் நடந்தாலும் தமிழ் மக்களாகிய நாம் மிகப்பாரிய மனித அவலங்களைக் கண்ட இனமாக எமக்கு நடந்ததைப்போன்ற வன்கொடுமை மனிதகுலத்திற்கெதிராக எங்கு இனப்படுகொலை நடந்தாலும் நாம் குரல் கொடுக்கத் தலைப்படுகின்றோம். இவ்வாறான உந்துதலால் மானிட சமுதாயத்தில் மானிட உரிமைகளுக்காகவும், உலக சமாதானம் மற்றும் உலக அமைதிக்காகவும் போராடும் அளவிற்கு எங்களைக் காலம் வழிநடத்தியுள்ளது என்பதே கண்கூடு.
ஈழத்தமிழினம் சந்தித்த பேரவலத்தின்பின் முன்னாள் கனடாப் பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்களுடன் ஒரு பயண ஒளிப்பதிவாளராக இலங்கையில் பயணித்த கயானா நாட்டைச் சேர்ந்த கனடியர் ராயன்சிங் அவர்களின் சிந்தையில் பெருமாற்றத்தைக் கொண்டுவந்தது. சீரிய சிந்தனையுடன் தமிழர்களின் அடையாளத்தை மற்றும் அவர்கள் இலங்கை மண்ணில் எதிர்கொள்ளும் பேரபாயத்தையும், வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் போராட்டத்தையும் கண்ணீருக்கும் நீதியும், பொறுப்புக் கூறலும் கிடைக்கவேண்டும் என்ற ஐ.நா நோக்கிய போராட்டத்தையும் எந்தவிதமான அரசியல் பின்னணியும்; இன்றி ஆவணப்படமாக்கியுள்ளார். தனது சொந்த முதலீட்டிலேயே இதனை அவர் செய்துள்ளார். அதன்பின்னர் இவரது நன்முயற்சி அறிந்து கனடா அரசும் மற்றும் தமிழ்ச் சமூகத்திலுள்ள ஆர்வலர்களும் வழங்கிய ஆதரவுடன் பல்கலாச்சாரக் கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் RAY OF HOPE எனும் நம்பிக்கை ஒளி இலங்கை எனும் இருண்ட கண்டத்தில் வடக்கு-கிழக்கு எனும்  திறந்தவெளிச் சிறைச்சாலையில் நடந்தேறிவரும் திட்டமிட்ட இனவழிப்பை உலகம் வாழ் மக்கள் எல்லாம் அறியும் வகையில் சொல்கின்றது இத்திரைபபடம்;. இருண்ட கண்டத்தில் வாழும் தமிழினத்தின் நம்பிக்கை ஒளியாக இவ்விடிவெள்ளி வெள்ளித்திரையில் 15 ஆவது வருட இனப்படுகொலை நினைவு வாரத்தில் முதன்முதலாக வெளியிடப்படுகின்றது.
பேரிருளில் ஏற்றப்படும்  விளக்குத்தான் இருள் நீக்கி ஒளி தருகின்றது.  இத்திரைப்படக்குழுவின் இந்த அரிய கூட்டு முயற்சியை தமிழ்ச்சமூகத்தின் சார்பாக கனடாத்தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு மற்றும் கனடாத் தமிழ் திரைப்பட மேம்பாட்டு அமையமும் இருகரங்கூப்பி வரவேற்கின்றது. அத்தோடு மட்டுமல்லாது 2024 மே 5 ஆம் திகதி இந்த ஆவணத்திரைப்படக்குழுவை விருந்தோம்பல் செய்து கௌரவித்து தமிழ்மக்களின் நன்றியறிதலைத் தெரிவிக்கஉள்ளோம். கனடா மத்திய பாராளுமன்றம்  மற்றும் ஒன்ராரியோ மாகண பாராளுமன்றம் அத்துடன் 5 மாநகரசபைகள் மற்றும் அதன் உறுப்பினர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எம் இனமே எம் சனமே உங்களின் பேராதரவையும் இந்நிகழ்விற்கு வழங்கி வரலாற்றுக் கடமையை ஒன்றுபட்டுச் செய்ய எம்முடன் வந்து இணையுமாறு பேரன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம் கனடாத் தமிழ் அமைப்புக்களின்  நீதிக்கான கூட்டமைப்பு 
ஏற்பாட்டாளர்கள்: 647-831-5161
முகுந்தமுரளி 416-731-4953, 
துஷ்யந்தன் இரட்ணராஜா, 
ஞானம் அன்ரனி, 
அன்புடன்
முகுந்தமுரளி
416-731-4953
Trailer - https://www.youtube.com/watch?v=jqVNqLMLhFs 

Leave a Reply