• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான நேரடியான விவாதம்

இலங்கை

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான நேரடியான விவாதம் தொடர்பாக பல கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த விவாதம் தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்துகின்றது.ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை முதலில் நேரடி விவாதத்திற்கு ஜேவிபியே அழைத்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய நிறைவேற்றுகுழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விவாதம் தொடர்பாக சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாட்டின் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்வைத்து நேரடி விவாதத்திற்கு வருமாறு அனுரகுமார திசாநாயக்கவே முதலில் அழைப்பு விடுத்திருந்தாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை சிலர் தவறாக விமர்சித்து வருவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

தற்போதும் அனுரகுமார திசாநாயக்க சஜித்துடன் விவாதம் நடத்துவதற்கு தயார் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவாதத்தை முன்னெடுப்பதற்காக சஜித் அணியினருக்கு இரண்டு முன்மொழிகளை ஜேவிபி முன்வைத்துள்ளது.

குறிப்பாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டினை முழுமையாக எவ்வாறு மீட்டெடுப்பது தொடர்பாக, முதலாவது விவாததத்திற்கு தாங்கள் தயாரென ஜேவிபி அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு ஜக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்றும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு சஜித் உடன்படாவிட்டால் ஜக்கிய மக்கள் சக்தியின் குழுவினருடன் விவாதங்களை முன்னெடுப்பதற்கும் தாம் தயாரென ஜேவிபி மேலும் தெரிவித்துள்ளது
 

Leave a Reply