• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் இளையராஜா

சினிமா

தமிழ் சினிமாவில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் இளையராஜா. தமிழ் சினிமா இசையுலகில் இளையராஜா என்ன மாதிரியான பாதிப்பையெல்லாம் ஏற்படுத்தினார் என்பது எல்லோருக்கும். தெரியும். ராஜாவின் பாடல்களையும், பின்னணி இசையையும் நம்பியே பல தமிழ் திரைப்படங்கள் உருவானது.

இளையராஜா இசை என்றால்தான் படங்களே வியாபாராம் ஆகும் நிலையும் இருந்தது. பல மொக்கை படங்களையும், காட்சியையும் கூட இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் காப்பாற்றி ஓட வைத்திருக்கிறது. ஒரு படத்தை துவங்கும்போது ஹீரோவின் கால்ஷீட்டை வாங்குவதை விட இளையராஜாவின் சம்மதத்தைத்தான் முதலில் வாங்குவார்கள்.

80,90களில் பல இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். தமிழில் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆக துவங்கியதே இளையராஜா வந்த பிறகுதான். ரஜினி, கமல்ஹாசன், பிரபு, மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இளையராஜா.

இப்போதும் பலரும் கார் பயணத்தில் கேட்பது ராஜாவின் பாடல்களைத்தான். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வந்த பின் ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனால், ராஜா எப்போதும் ராஜாதான் என சொல்வது போல அவரின் இசை ராஜாங்கம் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா என பலரும் நடித்து 1986ம் வருடம் வெளிவந்த திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தில் இடம் பெற்ற என்ன சத்தம் இந்த நேரம், சிங்களத்து சின்னக்குயிலே, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், கவிதை கேளுங்கள், மாமாவுக்கு குடுமா குடுமா, வான் மேகம் பூ பூவாய் தூவும் என அற்புதமான 6 பாடல்கள் இனிமையாக இருக்கும்.

அந்த 6 பாடல்களுக்கான மெட்டையும் அரை மணி நேரத்தில் ஒரு பாடலுக்கான டியூனை 5 நிமிடத்தில் போட்டு கொடுத்திருக்கிறார். அரை மணி நேரத்தில் 6 ட்யூன் போட்டு அடுத்த 2 மணி நேரத்தில் அனைத்து பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து கேசட்டை கையில் கொடுத்துவிட்டாராம் இளையராஜா. இந்த தகவலை இப்படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த சுரேஷ் கிருஷ்ணா ஊடகம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
 

Leave a Reply