• Welcome to TamilsGuide
செய்திகள் 1

111 வயது பிரித்தானியர்... உலகின் மிக வயதான நபர் -அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் 

பிரித்தானியாவை சேர்ந்த உலகின் மிக வயதான நபர், தமது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது ஜான் டினிஸ்வுட் என்பவர் தமது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்பது வெறும் அதிர்ஷ்டம் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமக்கு மிகவும் பிடித்தமான மீன் உணவு கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பணி ஓய்வு பெற்றுள்ள டெனிஸ்வுட் தற்போது உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இதுவரை வெனிசுலா நாட்டவரான 114 வயது Juan Vicente Perez Mora என்பவரே மிக வயதான நபர் என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார். இந்த வாரத் தொடக்கத்தில் அவர் மரணமடைந்த நிலையில், தற்போது ஜான் டெனிஸ்வுட் அந்த பட்டத்தை சொந்தமாக்கியுள்ளார்.

வடக்கு இங்கிலாந்தின் Merseyside பகுதியில் 1912ல் பிறந்தவர் ஜான் டெனிஸ்வுட். கணக்காளராகவும் அஞ்சல் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் எப்போதுமே ஒரே பதிலை அளித்து வந்துள்ளார்.

தமது நீண்ட ஆயுளுக்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே என குறிப்பிட்டுள்ள அவர், நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வித்தியாசமாக எதையும் செய்துவிட முடியாது. இது திட்டமிட்டு உருவாக்கப்படுவதும் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை உலகில் மிக அதிக காலம் வாழ்ந்த ஆண் என அறியப்படுபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த Jiroemon Kimura என்பவரே. இவர் 116 ஆண்டுகளும் 54 நாட்களும் உயிர் வாழ்ந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டவரான Maria Branyas Morera என்ற பெண்மணி 117 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் என்றே கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Leave a Reply