• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீட்டில் இருந்தே துவங்கிய தொழில் முயற்சி - இன்று ரூ 16,000 கோடி மதிப்பிலான நிறுவனம் 

ஜப்பானிய மின்னணு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சோனியில் பணியாற்றிய நபர், கடைசியில் நிதி நெருக்கடியில் சிக்க, நண்பருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இன்று ரூ 16,000 மதிப்பில் வளர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் 2018ல் சுமித் குப்தா மற்றும் அவரது கல்லூரி நண்பர் நீரஜ் கண்டேல்வால் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் தான் CoinDCX. சுமித் குப்தாவின் குடியிருப்பில் இருந்து துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 16,000 கோடி.

பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் காலகட்டமது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியுமா என்பதை சுமித் ஆராயத் தொடங்கினார்.

2018ல் CoinDCX நிறுவனத்தை தொடங்கும் முன்னர் சுமார் 4 ஆண்டுகள் தீவிரமாக கிரிப்டோகரன்சி சந்தை குறித்து சுமித் ஆய்வு நடத்தியுள்ளார். தொடக்கத்தில் பெரிதாக எந்த முன்னேற்றமும் பதிவாகவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அவர்களால் முடிந்தது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உலகமெங்கும் தொழில் நிறுவனங்கள் சவாலை எதிர்கொண்டு வந்த போதும் CoinDCX நிறுவனம் வளர்ச்சி பாதையில் முன்னோக்கி சென்றது.

வீட்டில் இருந்தே துவங்கிய தொழில் முயற்சி... இன்று ரூ 16,000 கோடி மதிப்பிலான நிறுவனம் | Started Business From Home Now 16000 Crore

2021ல் CoinDCX நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.1 பில்லியன் டொலர் என பதிவானது. இத்தகைய சாதனையை எட்டும் முதல் கிரிப்டோகரன்சி நிறுவனமாக CoinDCX மாறியது.

தற்போது 600 பேர்கள் CoinDCX நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். 1.5 கோடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறுகின்றனர். CoinDCX நிறுவப்பட்ட 4 ஆண்டுகளில் சந்தை மதிப்பு ரூ 16,000 கோடியை தாண்டியுள்ளது என்பது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply