• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை

இலங்கை

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்படுகின்ற முறைமையின் அடிப்படையில் இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆனால் பொதுத் தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன்இ சில அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாலும்இ ஜனாதிபதித் தேர்தலில் வேறொரு வேட்பாளரை ஆதரித்கின்ற நிலை காணப்படுவதனால்இ இது பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறுஇ இதுவரை எந்தக் கட்சியும் தம்மிடம் கோரவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply