• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கம விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம்

இலங்கை

அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீட்டை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி நவரத்ன மாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply