• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியலமைப்புக்கு முரணாகவே எம்மை கட்சியில் இருந்து நீக்கினர் -மஹிந்த அமரவீர

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக கூட்டணி அமைப்பதற்கான சந்தர்ப்பம் பல தடவைகள் கிடைத்தபோதிலும் அதனை கட்சியின் தவிசாளர் நிராகரித்திருந்ததாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாம் மீண்டும் எமது பதவிநிலைகளில் நீடிக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரனாகவே கட்சியில் இருந்து எம்மை நீக்கினர். SWRD பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்ட எமது கட்சிக்குள் ஒரு கட்டத்தில் பலவித முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனை இனியும் பொருத்துக்கொள்ளமுடியாத நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் இன்று நீதிமன்றத்தை நாடினார்.

ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இனியும் வீழ்;ச்சிப்பாதைக்கு செல்வதை அவர் விரும்பவில்லை.அதன்பிரகாரம் கட்சியின் தவிசாளர் பதவியில் மைத்ரிபால தொடர்ந்தும் நீடிப்பதற்கு இடையக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்காக கூட்டணி அமைப்பதற்கான சந்தர்ப்பம் பல தடவைகள் கிடைத்தபோதிலும் அதனை கட்சியின் தவிசாளர் அதற்கு விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பலர் இணைவதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பத்திலேயே கடந்த 30 ஆம் திகதி கட்சியின் தவிசாளர் எம்மை பதவிநிலைகளில் இருந்து நீக்கினார். அதன்பிரதிபலனை அவர் இன்று எதிர்கொண்டுள்ளார்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply