• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய சினிமாவில் முதல்முறை... சிவாஜி படத்தின் பாடல்களுக்கு போட்டி - பரிசு எவ்வளவு தெரியுமா?

சினிமா

பாவமன்னிப்பு படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதை படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த பாவமன்னிப்பு படத்தில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதையே படக்குழுவினர் படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத பல தத்துவ பாடல்களை கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள், சோகம், அழுகை, விரக்தி, காதல் உள்ளிட்ட பல தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒளிக்க செய்த கண்ணதாசன், பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

அதேபோல் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நெருக்கிய பழக்கிய கண்ணதாசன், இசையமைப்பாளர் – கவிஞர் என்பதை தாண்டி இருவருக்கும் இடையே ஒரு ஆழமான நடிப்பை போற்றி வந்தனர். அதே சமயம் கவிஞராக இருந்த கண்ணதாசன் சினிமா தயாரிப்பில் இறங்கியபோதே அவரை சுற்றி கடன் சூழ்ந்து கொண்டது. ஆனாலும் அதைப்பற்றிய கவலைகள் இல்லாமல் எப்போதும்போல் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார் கண்ணதாசன்.

அந்த வகையில் சந்திரபாபு கதையில் பீம்சிங் இயக்கத்தில் 1961-ம் ஆண்டு வெளியான பாவமன்னிப்பு படத்திற்கு அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளியான இந்த படத்தின் அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தங்கள் ப்ரமோஷனுக்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாவமன்னிப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். பாட்டு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். 

அதன்படி பாவமன்னிப்பு படத்தில் வரும் 8 பாடல்களையும் ஒன்றாக வரிசைப்படுத்தி அனுப்ப வேண்டும். படக்குழு நியமித்த நடுவர் குழுவினர் வரிசைபடுத்தியபடி யார் அனுப்பியிருக்கிறார்களே அவர்களுக்கு ரூ10 ஆயிரம் என்று பரிசு அறிவித்துள்ளனர். இதில் 10 பேர் சரியாக செய்திருந்தால் அனைவருக்கும் தலா ரூ1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதை கேட்டு பலரும் பாவமன்னிப்பு படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இந்திய சினிமாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், பாவமன்னிப்பு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து பலருக்கும் லாபத்தை அள்ளி கொடுத்தது என்று சொல்லலாம்.
 

Leave a Reply