• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெறும் 150 ஆசனங்கள் - பேரிழப்பை சந்திக்கவிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி

இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பேரிழப்பை எதிர்கொள்ளும் என்றே கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தொகுதி வாரியாக வாக்கு வங்கியின் அடிப்படையில், மொத்தமுள்ள 650 ஆசனங்களில் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 155 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.

அதேவேளை தொழிற்கட்சி 403 ஆசனங்கள் வரையில் கைப்பறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இதுவரையான கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் கன்சர்வேட்டிவ் கட்சியை விடவும் தொழிற்கட்சி இரட்டை இலக்கத்தில் முன்னிலை வகித்து வந்துள்ளது.

கடந்த 2010ல் இருந்தே கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அல்லது தனித்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. கடந்த மாதம் வரி குறைப்பு வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிறகும் மற்றும் மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவும் சுனக் இன்னும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சிரமப்படுகிறார் என்றே கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி 1997ல் தான் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டது. அப்போது 165 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தனர். ஆனால் தற்போது ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 155 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், கட்சியின் பிரபலங்கள் பலர் தோல்வியை சந்திப்பார்கள் என்றும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Leave a Reply