• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தி பேமிலி ஸ்டார் - விஜய் தேவரகொண்டா படம் 5- ந்தேதி ரிலீஸ்

சினிமா

'தி பேமிலி ஸ்டார்' என்ற புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா கதா நாயகனாக நடித்து உள்ளார் அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார்.தெலுங்கு ,தமிழ் , திரை உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கி உள்ளார்.கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.வருகிற 5- ந்தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா படம் குறித்து பேசினார். அப்போது "தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

என் நடிப்பில் வெளியான முதல் படத்துக்கு அளித்த ஆதரவு என்றும் மறக்க முடியாது. தற்போது மீண்டும் இயக்குனர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து உள்ளேன்.

இந்தப்படத்தில் நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் புதுவித பாணியை கடைபிடித்து உள்ளேன். இது ரசிகர்களுக்கு பிடிக்கும்." என தெரிவித்தார்.
 

Leave a Reply