• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

இலங்கை

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு பிராந்திய முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன்போது ஆசிரியர் வெற்றிடங்கள், வகுப்பறைகள் மற்றும் போதிய இடமின்மை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொழும்பு பிராந்திய முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய 40,000 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கிறார்கள் மற்றும் சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கொழும்பில் உள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் 200 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதிபர்கள் மற்றும் அமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply