• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கி அறிவிப்பு

இலங்கை

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் மிதமான பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இதேவேளை 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர் நோக்கிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காணமுடிந்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் உலக வங்கியின் சமீபத்திய இரு ஆண்டு வளர்ச்சி மதிப்பீட்டின்படி, நாட்டில் இன்னும் அதிக அளவு வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் சந்தை பிரச்சனைகள் உள்ளன என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply