• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலைகளில் மாற்றம்

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டை விலை குறைக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் முட்டை ஒன்று 43 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது முட்டை ஒன்றின் விலை 7 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

மேலும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு போதுமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply