• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணத்துக்கு முன்பே வருங்கால கணவருடன் சுற்றுலா சென்றுள்ள... வரலட்சுமி

சினிமா

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தன்னுடைய வருங்கால கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருந்த நிலையில், பின்பு காதலித்து தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.

நடிகை வரலட்சுமிக்கு தற்போது 39 வயதாகின்றது. இவரது காதலன் நிக்கேலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார். தற்போது 43 வயதாகும் நிக்கேலாய்க்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய வருங்கால கணவருடன் ஜாலியாக சுற்றுலா சென்றிருக்கிறார்.

இருவரும் ஜோடியாக தாய்லாந்து சென்று அங்கு ஊர்சுற்றி வருகின்றனர். திருமணத்துக்கு முன்னரே தன்னுடைய வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் வெக்கேஷன் சென்றுள்ள போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
 

Leave a Reply