• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காபியில் ரத்தத்தை கலந்து குடிக்கும் பெண்... 

சினிமா

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவர் தினமும் ரத்தத்தினை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் இதனை வெளியுலகத்திற்கு தெரிவித்த அவர் தற்போது 10 ஆண்டுகளில் 3.800 லிற்றர் ரத்தத்தினை குடித்துள்ளாராம்.

காலையில் காபி குடிக்கும் போது கூட ரத்தத்தினை அதில் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ரத்தத்தினை நேரடியாக குடிக்கும் போது, அது அவருக்கு எனர்ஜியாக இருக்குமாம்.

தண்ணீர் குடிப்பது போன்று ரத்தமும் அவருக்கும் மிக முக்கிய தேவை என்று கூறியு்ளளார். டிவி பார்க்கும் போது, ஓவியம் வரையும் போது என அனைத்து தருணங்களிலும் ரத்தம் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மிருகங்களின் ரத்தத்தினை விட மனிதர்களின் ரத்தம் மிகவும் சுவையாக இருப்பதாகவும், ஆனால் அதனை குடிப்பது கடினம்... தான் ரத்த காட்டேரி இல்லை... ஆதலால் மனித ரத்தத்தினை குடிப்பதில்லை.

பழக்கம் வந்தது எப்படி?

மிச்செல் 18 வயதாக இருக்கும் போது மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்பொழுது கையில் அடிபட்டு ரத்தம் வந்த போது, அதனை வாயில் வைத்தேன்.

அப்பொழுது அந்த ருசி மிகவும் பிடித்ததிலிருந்து தனக்கு இந்த பழக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ரத்தம் கிடைக்கவில்லை என்றால் எரிச்சலும், கோபமும் ஏற்படும்... தனக்கு எப்பொழுதும் ரத்தம் வேண்டும் என்று குறித்த பெண் கூறியுள்ளார்.

Leave a Reply