• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடல்களில் தலையீடு - எம்.ஜி.ஆரிடமே எகிறிய ஒரே இயக்குனர் இவர்தான்

சினிமா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் தனது படத்திற்காக பாடல்களை தானே தேர்வு செய்யும் வழக்கத்தை வைத்திருந்தாலும், அவரிடம் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் எதிர்த்து பேசி பாடல்களில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

சிவாஜி கணேசன் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கினால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என்று அவரை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார்.

பி.ஆர்,பந்தலுவின் நிலையை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் ஒரு நல்ல கதையுடன் வாருங்கள் கண்டிப்பான பண்ணலாம் என்று சொல்ல, உற்சாகமாக பி.ஆர்.பந்தலு, அப்போது ஒருவாக்கிய கதைதான் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர் – பி.ஆர் பந்தலு இருவரும் இணைந்து முதல் படமாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தனது

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தில் 4 பாடல்களை கவிஞர் வாலியும், 3 பாடல்களை கவியரசர் கண்ணதாசனும் எழுதியிருந்தனர். படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் முக்கிய படமாக அமைந்தது.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக உயர்ந்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்திற்கு மேல் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான அத்தனை முடிவுகளையும் தானே எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் சொல்வதை கேட்டு நடப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இதில் இருந்து சற்று மாறுபட்டவர் தான் இயக்குனர் பி.ஆர்.பந்தலு.

மற்ற படங்களை போலவே இந்த படங்களின் பாடல்களையும் தான் தேர்வு செய்ய விரும்பிய எம்.ஜி.ஆர் அதற்கான முயற்சி செய்தபோது, என்ன நீங்க பாடல்களில் எல்லாம் தலையிடுறீங்க, இதெல்லாம் நீங்கள் செய்ய கூடாது. நான் ஒன்றும் அனுபவம் இல்லாத ஒரு இசையமைப்பாளரை படத்திற்கு இசையமைக்க தேர்வு செய்யவில்லை. அனுபவம் உள்ளவரைத்தான் போட்டிருக்கிறேன். நீங்கள் நடிப்பதை மட்டும் கவனியுங்கள். இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேராக கூறியுள்ளார். தான் இயக்கும் மற்றும் தயாரிக்கும் படங்கள் தனது முடிவின் கீழ் வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தான் பி.ஆர்.பந்தலு என்று எம்.எஸ்.விஸ்வாநாதன் கூறியுள்ளார்.
 

Leave a Reply