• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்

சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே ஒரு பாடல் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடிப்பில் ஊதி தள்ளிவிடும் மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

பாடல்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஒருமித்த குரலாக ஒலித்தவர் TM சௌந்தரராஜன் அவர்கள். TMS பாடலுக்கு சிவாஜி வாயசைப்பது கிட்டத்தட்ட அவரே நிஜத்தில் பாடுவது போல் அமைந்திருக்கும். அந்த அளவுக்கு TMS-ன் குரல் சிவாஜிக்குப் பொருந்திப் போகும்.

இவ்வாறு ஒரு பாடலில் TMS படியதற்கு அதில் நடிக்க சிவாஜி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். 1973-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கெளரவம். 

பாலூட்டி வளர்த்த கிளி, நீயும் நானுமா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட திரைப்படம். இன்றும் இந்த 2 பாடல்களும் வாழ்வின் அம்சங்களில் பலவற்றில் பொருந்திப் போகும் பாடலாக மக்களிடையே பிரபலமாக உள்ளது. இந்த படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்.

இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான நீயும் நானுமா..கண்ணா நீயும் நானுமா என்ற பாடல் ரெகார்டிங் முடித்து வந்திருக்கிறது. எந்த பாடலாக இருந்தாலும் ஒரு முறை அல்லது 2 முறை கேட்டு விட்டு ஷூட்டிங் தயாராகும் நடிகர் திலகத்திற்கு இந்த பாடலை பல முறை கேட்டும் அவருக்கு எப்படி நடிப்பது என்று சவாலாக இருந்திருக்கிறது.

TMS இந்தப் பாடலை பல்லவியில் ஒரு பரிணாமம், சரணத்தில் ஒரு தொனி என ஒரு தேர்ந்த நடிகனைப் போல பாடியிருக்கிறார். இதனால் பாடல் அற்புதமாக வந்துள்ளது. இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என சிவாஜி கூற இயக்குனர் பதறியிருக்கிறார். 

இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க இல்லை வேண்டாம் இந்தப் பாடலில் TMS மிகுந்த சவால் எடுத்துப் பாடியிருக்கிறார். அவர் அளவுக்கு நானும் மெனக்கெட்டு நடிக்க வேண்டும். எனவே இன்னும் எனக்கு நேரம் தேவை என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு ஒரு கலைஞனின் திறமையை மதித்து அவருக்கு இன்னும் புகழ் சேர்க்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை இன்னும் செம்மைப்படுத்தியது அந்த கால சினிமாவின் அணுகுமுறையை வியக்க வைக்கிறது.
 

Leave a Reply