• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.

5 கிலோ எரிவாயுவின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன். அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

அத்தோடு 2.3 கிலோ எரிவாயுவின் விலை .23 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர் பீரிஸ் தெரிவித்தார்.
 

Leave a Reply