• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் 

சினிமா

ஈழத்தில் எத்தனை ஆலயங்களில் தேரோடினாலும் தேரோட்டம் என்ற பெயரால் சிறப்பித்து அழைக்கப்படுவது எங்கள் கொக்கட்டிச்சோலை ஈசனின் தேரோட்டத்தையே

வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாறுகளை கடந்து பிறப்பு இறப்பற்று நின்று இவ் உலகை இயக்கும் ஈசன் தானாக தோன்றி குடிகொண்டு ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தலம்  என்ற சிறப்பையும், ஈழத்தில் பழமை பொருந்திய தேரினை கொண்ட ஆலயம் என்ற சிறப்பையும் , ஈழத்தில் முதன் முதல் தேரோடிய ஆலயம் என்ற சிறப்பையும், ஈழத்தில் உள்ள சைவ ஆலயங்களில் நெடிய கொடிமரத்தை கொண்ட ஆலயம் என்ற சிறப்பினையும் , கல் நந்தி புல்லுண்டு வெள்ளையரை புறமுதுகிட்டு ஓடச்செய்த ஆலயம் என்ற சிறப்போடு இன்னும் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டு பன்னெடுங்காலமாக மரபு மாறாது பூசைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

வருடம் ஒருமுறை ஈசன் தேரின் வடம்பிடிப்பதே வாழ்வின் இலட்சியம் என வாழும்  சிவ பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோகரா கோசமிசைக்க சித்திரைத்தேரேறி சிங்காரமாய் அசைந்தாடி வலம் வந்த ஈசன் திருக்கோலம் காண கண் கோடி வேண்டும்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் உற்சவத்தில் கலந்து ஈசன் அருள் பெற்று சென்றனர்.

இன்றைய தேரோட்ட நிகழ்வின் சம்பவங்கள் கடவுளை மறந்து நிற்கும் பலருக்கு கடவுள் இருக்கிறார்

"#அவனின்றி_ஓர்_அணுவும்_அசையாது" என்பதை எடுத்து கூறி நிற்கிறது.

ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளது.

இன்று மாலை 4.00 க்கு ஆரம்பமாகும் தேரோட்டநிகழ்வில் பிள்ளையார் தேரும் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை. இத்தேர்தல்களில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச்செல்வார்கள்.

ஆனால் இவ்வாண்டு  சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம்(கயிறு) ஐந்து சந்தர்ப்பங்களில் ஒன்றின் பின் ஒன்றாகவும்

ஒரே சந்தர்ப்பத்திலும் மொத்தமாக ஏழு தடவைகன் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றது.

அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்துள்ளது.

(அறியாத வயது முதல் தேரோட்டம் பார்த்தாலும் நானும் நண்பன்  சி.பகீரதனும் பதினொரு வயதில் இருந்து சாரணியத்தில் இணைந்து

தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் தேரோட்ட சாரணிய சேவைக்காக செல்பவர்கள் தேரோட்டத்தின்போது தேருக்கு அருகில் இருந்து அங்கு நடக்கும் விடயங்களை உற்று நோக்குபவர்கள்
கடந்த சில வருடங்களுக்கு முன் ஆலயத்தின் வடக்கு வாசலிலே இடம்பெற்ற சம்பவங்களையும் பார்த்தவர்கள்.

அதேபோல் இந்த வருடம் வடங்கள் அறுந்ததையும், ஐந்து வடங்கள் பூட்டிய சந்தர்ப்பங்களையும் நேரில் பார்த்து பதிவு செய்த காட்சிகளை இணைத்துள்ளேன்.)

( ஏற்கனவே மூன்று வடங்கள் பூட்டுவது மட்டும் வழமை, இரண்டு வடங்கள் மட்டும் சித்திரதேருக்கு பூட்டி இழுக்கப்பட்ட வரலாறுகள் உண்டு )
ஆனால் ...
வழமை போன்று விநாயகர் தேர் இரண்டு வடங்கள் பூட்டப்பட்டு
பி.ப - 4.35 மணிக்கு இழுக்கப்பட்டு வடகிழக்கு பக்கம் நிறுத்தியபின்னர்
அது போன்று சித்திரத்தேர் மூன்று வடங்கள் பூட்டப்பட்டு அடியார்கள் இழுத்தபோது வடம் (கயிறு) அறுந்தது.பின்னர் அதனை முடிச்சுப்போட்டு திரும்பவும் இழுத்தவேளை அதுவும் அறுந்தது மூன்றாவது தடவையும் அறுந்தது பின்னர் நீற்றுபூசனி வெட்டி தேங்காய்கள் தேர் சில்லுகளுக்கு வண்ணக்குமார் அடித்து நொறுக்கியபின்னர் திரும்பவும் இழுத்தபோது நான்காவது தடவையும் வடம் அறுந்தது, அதன் பின்னர் நீற்றுபூசனிக்காய்கள் நான்கு சில்லுக்கு பக்கத்தில் வைத்து வெட்டி மீண்டும் சித்திரத்தேர் இழுத்தபோதும் ஐந்தாவது தடவையும் வடம் அறுந்தது.
அதன் பின்னர் பிரதமகுரு சிவஶ்ரீ மு.கு.சச்சிதானத்தக்குருக்கள் அவர்கள் சித்திரத்தேரில் இருந்து இறங்கிவந்து தேர் சில்லுகளை தொட்டு வணங்கிவிட்டு மூலவரின் அறையில் சென்று மௌனப்பிரார்தனைகள் செய்து மூலவரின் முன் தேங்காயில் சூடம் ஏற்றி  அதனை அங்கிருந்து சித்திரத்தேரை சுற்றி வணங்கிய பின்னர் அந்த தேங்காயை ஆலயத்தின் வெளிவீதியில் ஆலய வாசலில் உடைத்தார்.
பின்னர் மீண்டும் சித்திரத்தேரில் அவர் ஏறிய பின்னர் வினாயகர் தேரில் ஏற்கனவே கட்டப்பட்ட இரண்டு வடங்களை மீண்டும் அவிட்டு அதனை கொண்டு வந்து சித்திரத்தேரில் பூட்டி(கட்டி) மொத்தமாக ஐந்துவடங்கள் சேர்த்து அடியார்கள் அரோகரா சத்தம் வானைப்பிழக்க சித்திரத்தேர் இழுக்கப்பட்டபோது தேர் நகர்ந்து சென்று எந்த தடங்களும் இன்றி ஆலயத்தை வலம்வந்தது.
பிரதம குரு கூறியது..
தேர் இழுப்பதற்கு முன்னமே
பிரதம குரு மு.கு.         சச்சிதானந்தக்குருக்கள் அவர்களுக்கு மனதில் இது முன்கூட்டியே இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என அறிந்திருந்தார் ஆனால் எது நடக்கும் என அவருக்கு தெரியவில்லை...
தேரோட்டம் இடம்பெற முன்னம் சுவாமி விக்கிரங்கள் உள்வீதியில் இருந்து வெளிவீதிக்கு வந்து தேரில் வைப்பதற்கு முன் (ஏணி அடியில்) வரும்போது படையாட்சிகுடி வண்ணக்கர் அவர்களிடம்
பிரதம குரு சிவஶ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் கூறியுள்ளார்.
இதேபோன்று முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது 1920 களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும் வரலாறு , 1933 இல்  உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும்  மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.

உங்களில் ஒருவனாக அம்பிளாந்துறையூர்
ஜீ. அனோஜன்.

Leave a Reply