• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்நாள் தொண்டு செய்ய சென்ற பிரித்தானிய மாணவிக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த துயரம்

பிரித்தானிய மாணவி ஒருவர் கானா நாட்டில் நீச்சலின்போது தலையில் அடிபட்டு இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மேற்கு யார்க்ஷிரேவின் Kirklees நகரைச் சேர்ந்த செவிலியர் மாணவி Millie Ann Gentry (19). Bradford பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்த இவர், கானா நாட்டிற்கு தன்னார்வத் தொண்டாற்ற சென்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தன்னார்வ தொண்டாற்றுவதே ஜென்ட்ரியின் கனவு ஆகும். இதற்கான பயணமாகவே இவர் கானாவுக்கு சென்றுள்ளார்.
  
அங்குள்ள தென்மேற்கு கடற்கரையில் உள்ள Busua கடற்கரை விடுதி ஒன்றில் தனது நண்பருடன் ஜென்ட்ரி தங்கி இருந்தார். அவர்கள் இருவரும் மற்றொரு நண்பர் லூயிஸ் மல்லின்சனுடன் சேர்ந்து கடலில் நீந்த முடிவு செய்துள்ளனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் மூவரும் நீச்சலுக்காக வெளியேற சென்றுள்ளனர். அப்போது நீச்சலில் ஈடுபட்ட ஜென்ட்ரி, கடந்த 17ஆம் திகதி அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில் ஜென்ட்ரிக்கு கடலில் இருந்தபோது, தலையில் அடிபட்டதில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது தாயார் ட்ரேசி குடும்பத்தின் சார்பாக விசாரணைக்கு ஒரு அறிக்கையை வழங்கினார். 3 உடன்பிறப்புகளைக் கொண்ட தனது மகளை, குழந்தைகள் செவிலியத்தில் தன்னை அர்ப்பணிக்கப் போகும் 'அழகான பெண்' என்று விவரித்தார். 
 

Leave a Reply