• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

சினிமா

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. அப்போது இளையராஜா இப்பாடலை பாடிக்காட்டினார்.
பின்னர், “மாங்குயிலே பூங்குயிலே” பாடலையும் அந்த மெட்டுக்கு இந்தப் பாட்டு இந்த மெட்டுக்கு அந்தப் பாட்டு என்று மாற்றிப் பாடினார் இளையராஜா. மாணவிகள் கரவொலி எழுப்பினார்கள்.
பெண்ணைத் தாமரைக்கு ஒப்பிடுவது பரவாயில்லை, அதென்ன ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை?
இயற்கையாக, தாமரை பகலில்தான் மலரும். இரவில் கூம்பிவிடும். இதைதான் எல்லா இலக்கியங்களிலும் திரும்பத் திரும்பப் பலமுறை படித்திருக்கிறோம்.
ஆனால் இங்கே, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை’ என்று குறிப்பிட்டுச் சொல்லி அதைப் பெண்ணுக்கு உவமையாக்குகிறார் கவிஞர்.
உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு பொருளை உவமையாகச் சொல்வதால், தமிழ் இலக்கணப்படி இதற்கு ‘இல் பொருள் உவமை (அல்லது உருவக) அணி’ என்று பெயராம்…
பாடல் வரிகளை மேலோட்டமாக ரசித்தால், ராஜாவின் அசத்தலான ட்யூனும், அமிர்த்தமான பாலுவின் குரலும் ராத்திரியில்
நம்மை தூங்கவிடாது…
———————-
படம் : தங்க மகன்
இசை : இளையராஜா
வரிகள்: புலமைப்பித்தன்
குரல்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
———————–
பாடல் வரிகள்:
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய
அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

Leave a Reply