• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய கட்சியாக மாற்ற போகும் விஜய்

சினிமா

விஜய் கட்சி ஆரம்பிச்சு அந்த கட்சிக்கு பேர சொல்லி ஒரு மாசம் ஆகுது. பல இளைஞர்கள் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். விஜய் சொன்ன மாதிரியே 2 கோடி உறுப்பினர்களே சேர்த்துக் கொண்டே வருகிறார். ஆனால் விஜய் இன்னும் பேச ஆரம்பிக்கல, போடா பொறுக்கி அரசியல் ரீதியா வெளிய வர ஆரம்பிக்கல.
  
ஆனா அதுக்குள்ள விஜய் சார்பாக தொலைக்காட்சிகளில் பேச வரும் நபர்களால் மோசமான கெட்ட பெயரை வாங்கி வருகிறார் விஜய். ஏற்கனவே அவர் கூட உள்ள புஸ்ஸி ஆனந்த் பண்றது பார்த்தா விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கல. விஜய் சார்பாக இன்னும் யாரும் ஒழுங்காக அவர் பக்கத்துல இல்ல என்று நன்றாக தெரிகிறது.

இப்படி இருக்க விஜய் திடீரென்று கேரளா சென்றுள்ளார் கோட் படப்பிடிப்பை அங்கு நடத்துவதற்காக ஆனால் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ்நாட்டை தாண்டி அங்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர். இந்த கூட்டத்தை பார்த்தால் கேரளாவில் உள்ள நடிகர்களுக்கு கோபம் வரும் அந்த அளவுக்கு கூட்டம் சேர்ந்துடுச்சு.

ஆனா சினிமா ஷூட்டிங் காக போன விஜய் கூட எதற்கு புஸ்ஸி ஆனந்தை அழைத்து போக வேண்டும். விசாரித்து பார்த்ததில் தமிழ்நாட்டுக்கு சமமான ரசிகர்களை கேரளாவில் உள்ளதை அறிந்த விஜய்.

அங்கேயும் தன் கட்சியை ஆரம்பித்து விடலாம் என்று யோசனையில் உள்ளாராம். இதற்காக ரசிகர்களை சந்திக்கிறாராம் அதற்காகத்தான் புஸ்ஸி ஆனந்தை அழைத்து சென்றுள்ளார்.

அதேபோல் புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தனது கட்சியை ஆரம்பித்து விடலாம் என்று யோசனையில் உள்ளாராம். இதற்கு முக்கியமாக காரணம் மாநில கட்சியாக இருந்தால் சீமான் கட்சி போல சின்னம் கொடுக்காமல் அசிங்கப்படுத்தி விடுவார்கள்.

இதனால் கட்சியை தன் ரசிகர்களை வைத்து தேசிய கட்சியாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாராம்.

இது என்னடா கொடுமையா இருக்கு தமிழ்நாட்டுல விஜய் கட்சி ஆரம்பித்தது அதுக்கே இன்னும் எதுவும் பண்ணல இன்னும் ஒரு வரி பேசக்கூட இல்ல. என்ன பேசுவது என்று கூட தெரியாம விஜய் இருந்து வருகிறார்.

அதற்குள் இப்படி ஒரு யோசனையை கொடுத்தது யாருன்னு தெரியல. இன்னும் என்ன எல்லாம் பண்ண போறாங்களோ பொறுத்திருந்து பார்ப்போம். 
 

Leave a Reply