• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜனிகாந்தை  ஹீரோவாக்கிய ஸ்ரீகாந்த்!

சினிமா

அந்தக் காலத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த். 

அப்போது நடிகர்  ரஜனி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வளர்ந்து வரும்போது, ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். 

நடிகர்  ரஜனியின் நண்பரான கலைஞானம் தலைவர் ரஜினியை ஹீரோவாக வைத்து 'பைரவி' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்கிறார். 

ஆனால் ரஜனி வளரும் நடிகர் என்பதால் ஸ்ரீகாந்த் அந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கலைஞானம் கருதினார். அப்போது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார்.

அவரை சந்தித்து பேசிய கலைஞானம் ரஜினின்னு ஒரு புது பையன். ரொம்ப வருஷமாக அவனை தெரியும். பாலச்சந்தர் படங்கள்ல தொடர்ச்சியா நடிச்சிட்டிருக்கான். அவனை ஹீரோவா போடடு பைரவின்னு ஒரு படம் பண்றேன். அதுல நீங்க வில்லனா நடிக்கணும் என்றார்.

ஸ்ரீகாந்துக்கு கடும் கோபம். 

ஹீரோவான என்னை வில்லனாக்கிட்டு புது பையனை ஹீரோவாக்குறீங்களா? என்று கோப்பட்டிருக்கிறார். அதற்கு பிறகு கலைஞானம் பக்குவமாக பேசி வளர்ற பையன்.. நீங்கதான் உதவி பண்ணனும் என்று கூறியிருக்கிறார். மனமிறங்கிய ஸ்ரீகாந்த் சரி நடிக்கிறேன் என்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை வாங்கி விநியோகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைவர் ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்'என்று பட்டம் கொடுத்தார். அதுவரை ஹீரோவாக  நடித்த ஸ்ரீகாந்த் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

Viji

Leave a Reply