• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பை நிறுத்துமாறு அரச நிதிக்குழு பரிந்துரை

இலங்கை

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினை நிறுத்திவைக்குமாறு அரச நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான அரசி நிதிக்குழுவின் அறிக்கையை இன்று நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே, குறித்தக் குழுவின் தலைவர் ஹர்ஷ டீ சில்வா நாடாளுமன்றில் இவ்வாறு வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரச நிதிக்குழுவின் அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்கின்றேன்.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இலங்கை மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான அரச நிதிக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டும்.

சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டிற்கு வரும்வரை சம்பள அதிகரிப்பு ஒத்திவைக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி ஊழியர்களி;ன் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை சம்பள அதிகரிப்பை நிறுத்துவதற்கு நிதியமைச்சரினால் குழவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

நான்கு வாரங்களுக்குள் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


 

Leave a Reply