• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினிகாந்த் தன்னை வளர்த்துவிட்டவர்களை வாழ வைக்க ஒரு படம் நடித்தார்

சினிமா

பல நடிகர்கள் தங்களது முதல் இயக்குனர்களையே அசிங்கப்படுத்தும் நன்றி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் தன்னை வளர்த்துவிட்டவர்களை வாழ வைக்க ஒரு படம் நடித்தார். அது தான் அருணாச்சலம். அப்படத்தில் தயாரிப்பாளர்கள் ஒன்று இல்லை 8 பேர் என்பது தான் ஆச்சரியமான விஷயமே. 

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அருணாச்சலம். இப்படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதினார். தேவா இசையமைத்து இருந்தார். 1997ம் ஆண்டு ரிலீஸான இப்படம் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் சக்ஸஸாக கருதப்பட்டது. 32 கோடி வரை வசூல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர்களின் 8 பேர் தான் ஹைலைட்டே. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் முதல் படத்தை தயாரித்த கலாகேந்திரா பட நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜ் – துரை இருவரும் ஒரு தயாரிப்பாளர்களாக உள்ளே வந்தனர். ரஜினியின் சில படங்களில் அயராது உழைத்த தயாரிப்பு நிர்வாகி கே.எஸ்.நாகராஜனுக்கும் பங்குதாரராக ஒரு இடம் கொடுத்தார்.

வள்ளி படத்தில் தனக்கு உதவியாக இருந்த கே.முரளி பிரசாத் ராவ். இவர் தன்னுடைய சகோதரர் மற்றும் தாயாருடன் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் போது ரஜினி ஆரம்பகாலங்களில் தங்கி இருந்த வீட்டில் தான் இருந்தார்களாம். அதனாலே அவரையும் படத்தின் பங்குதாரராக ரஜினி சேர்த்தார்.

ரஜினி நடித்த காளி படத்தினை தயாரித்த ஹேம்நாத். படம் ரிலீசாகி பெரும் வசூலை பெற்றாலும், படப்பிடிப்பின் போது குதிரைகள் தீயில் கருகியதாம். இதனால் அவருக்கு பெரிய அளவில் இழப்பும் ஏற்பட்டது. அதனால் அவரையும் படத்தின் பங்குதாரராக இணைத்தார். ரஜினிக்கு ரொம்பவே பிடித்தமான ஒரு நடிகர் வி.கே.ராமசாமி. அவர் வயது முதிர்ந்து செலவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளராக இணைத்து கொண்டார்.

அருணாச்சலம் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்தும் இருப்பார். மன்னன் படத்தில் ரஜினியின் தாயாக நடித்த பழம்பெரும் நடிகை பண்டாரிபாய் ஒரு விபத்தில் தன்னுடைய கையை இழந்தார். அவருக்கு உதவும்பொருட்டு அவரை தன்னுடைய படத்தில் இணைத்தார் ரஜினிகாந்த். வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக்கியதில் கலைஞானத்துக்கு அதிக பங்குண்டு.

அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் தன்னுடைய பங்குதாரர்கள் டீமில் அவரையும் இணைத்தார். இந்த ஏழு பேருமே ரஜினிக்கு ரொம்பவே நெருக்கமானவர்கள். ஆனால் சம்மந்தமே இல்லாத எட்டாவது ஆளாக இணைந்தவர் பதம்நாபன். அவர் எம்.ஜி.ஆரின் விசுவாசி. குடும்பமே கஷ்டப்பட்டாலும் எம்ஜிஆருக்காக உழைத்தவர்.

அவர் இறந்த ஒன்று இரண்டு மாதங்களிலேயே அவரும் உயிரிழந்தார். ஆறுபெண்களுடன் அவர் மனைவி தனியாக நிற்க இதை ரஜினி எப்படியோ தெரிந்துக்கொள்கிறார். அதை தொடர்ந்து அவரையும் இணைத்து எட்டு பேருடன் உருவாக்கிய நிறுவனத்தினை வைத்தே அருணாச்சலம் படத்தினை தயாரித்தார்.
 

Leave a Reply