• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டேப் ரிகார்டர் கேசட் வெளிவந்த காலத்தில்

சினிமா

இதை விட பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனும் அளவுக்கு
அதை கொண்டாடி மகிழ்ந்தோம் 
கேசட் ல பதிவு செய்ய பாடல்களை தேர்வு செய்ய பரிட்சைக்கு தயாராவதை போல முழு ஈடுபாட்டுடன் செய்வோம் 
60 கேசட் ல 12 பாடல்கள்
90 கேசட்டு ல 18 பாடல்கள் 
கடைக்காரரிடம் பதிவு செய்ய கொடுத்து விட்டு ஒரு வாரம் நடையாய் நடப்போம் 
அந்த காலகட்டத்தில் அவர் நமக்கு கடவுளாக தெரிவார்
எம்ஜிஆர் ஹிட்ஸ்
காதல் பாடல்கள்
தத்துவ பாடல்கள்
கொள்கை பாடல்கள் பதிவு செய்தோம்.
பட்டத்து ராஜாவும்
நேருக்கு நேராய்
போன்ற பாடல்கள் ரெக்கார்டில்  பாடல் வரிகள்  முடியும்போது முழுமை பெறாததால் திருப்தி அடையாமல் கவலையாக இருக்கும்.
எனவே இப்பாடல்களை படச்சுருளிலிருந்து கேசட்டில் நேரிடையாக பதிவு செய்து வைத்திருப்பவரை கண்டு பிடித்து முழுமையாக பதிவு செய்து வாங்கி வந்து கேட்டு திருப்தி அடைந்ததுண்டு.
எம்ஜிஆர் பாடல்களை வசனத்துடன் தொடங்கும் பாடல்கள்
என தனியாக பதிவு செய்ய கோவை கெம்பட்டி காலனியில் ஹரி என்பவர் இருந்தார்.
இவர் அனைத்து எம்ஜிஆர் படங்களையும் தியேட்டர் புரொஜக்டரிலிருந்து ஆடியோவாக பதிவு செய்து வைத்திருப்பார்.
ரிக்சாக்காரன் டைட்டில் மியூசிக்கை இவரிடம் பதிவு செய்வதற்கே கூட்டம் அலைமோதும்.
எம்ஜிஆர் படத்தின் மூன்று மணி நேர கதை வசனம் பதிவு செய்து கேட்பது தனி சுகம்.
இந்த வகை டேப்ரிக்கார்டரை வெறைட்டி ஹால் எலக்ட்ரானிக் கடையில் 450ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தினேன்.
மயங்கும் வயது...கணவன் படப்பாடல் இசைத்தட்டில் இல்லை என்பதற்காக  ஹரியிடம் பதிவு செய்து வாங்கினேன்.
சந்திரோதயம் ஒரு பெண்ணாகி
சக்கரைகட்டி ராசாத்தி
போன்ற பாடல்களில் இசைத்தட்டில் சில வார்த்தைகள் மாறி இருக்கும் என்பதற்காக படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஹரியிடம் பதிவு செய்து கேட்டு மகிழ்வேன்.

இப்படி தனித்தனியாக தேர்வு செய்து பதிவு செய்து அதை கேட்கும் போது அடடா என்ன ஒரு ஆனந்தம் 
ஒரு லைப்ரரி வைக்கும் அளவிற்கு
கேசட் அடுக்கி வைத்து இருப்போம்
என்ன என்ன பாடல்கள் என்று தேர்வு செய்து மறந்து போகாமல் இருக்க எழுதி வைத்து கொள்ளவும் ஒரு தனி நோட் வைத்து இருப்போம் 
ஸ்கெட்ச் பேனாவில் ஒவ்வொரு கேசட் முகப்பிலும் அழகாக எழுதி ஆசையாக பார்த்து இருப்போம் 
எம்ஜிஆர் அரசியல் மேடைப் பேச்சு
ரிக்சாக்காரன் சிறந்த நடிகர் விருது பாராட்டு விழா-எம்ஜிஆரின் தீர்க்கதரிசனம் பேச்சு
சினிமா பாடல் மெட்டில் எம்ஜிஆர் புகழ் பாடல்
எம்ஜிஆரின் கடற்கரை ஆவேசம் பேச்சு
திருச்செங்கோடு பேச்சு-எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு முழு ஆடியோ பேச்சு
திருச்சி சவுந்தரராஜன் எம்ஜிஆரிடம் வாக்குவாதம் ஆடியோ
எம்ஜிஆர் கீர்த்தனைகள்
 என்று தனி தொகுப்பாக பல கேசட்டுகள் வைத்து இருந்தேன் 
இவற்றில் சிலவற்றை நண்பர் ஒருவர் வாங்கி பின் இதுவரை தரவே இல்லை.
இந்த வகை டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்டு கொண்டு இருக்கும் போது ஒலிநாடா மாட்டிக்கொள்ளும்.
அதை நாசூக்காக வெளியே எடுத்து
அதை பழையபடி கேசட்ல சுற்றிக் கொள்ள ஒரு நட்ராஜ் பென்சில் தயாராக இருக்கும் 
இன்று பல அறிவியல் சாதனங்கள் நம்மை ஆக்ரமித்தாலும் அன்று நாம் அடைந்த இதுபோன்ற ஆனந்தங்கள் என்றென்றும் நம் மனதில் பசுமையாக இருக்கும் 

அது ஒரு கனா காலம் 

Leave a Reply