• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் ஆண்டனிக்கு கிறிஸ்தவ சங்கம் கண்டனம்

சினிமா

இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், , பாடலாசிரியரென பன்முகத்தன்மையுடைவர் விஜய் ஆண்டனி. 'நான்' என்ற படத்தில் கதாநாயகனாக திரையுலகப் பயணத்தை துவக்கினார். 'நான்' படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் , புகழையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் 'பிச்சைக்காரன்' படத்தில் நடித்தார். இத்திரைபடம் வசூலில் மிரட்டியது. பட்டித்தொட்டி எங்கும் 'பிச்சைக்காரன்' படம் சேர்ந்தது. விஜய் ஆண்டனி திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக பிச்சைக்காரன் இருக்கும் எனலாம்.

தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார்/ மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

புராணத்தில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜ ராஜ சோழன் காலத்தில் சோமபானம் குடித்து கொண்டு இருந்தார்கள் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்துவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார். அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரின் வீட்டிற்கு முன்பு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கை விட்டுள்ளனர்.

Leave a Reply