• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு

சினிமா

தென்கிழக்கு ஈரானில்  சுமார் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்(lipstick) கண்டுபிடிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையான லிப்ஸ்டிக் என நம்பப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் ஒரு பண்டைய பெண்ணின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மெழுகு, விலங்கு கொழுப்பு மற்றும் களிமண் ஆகியவற்றின் கலவையாகும். லிப்ஸ்டிக் சிவப்பு நிறத்தில் இருந்தது, இது ஒரு வகை ஈய சாயத்தால் செய்யப்பட்டது.

ஹலீல் நதி வெள்ளப்பெருக்கு

கிமு 3 ஆம் மில்லினியத்தைச் சேர்ந்த பல கல்லறைகள் 2001 ஆம் வருடம் ஹலீல் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக பல கல்லறைகளில் இருந்த கலைப் பொருட்கள் வெளிவந்தன.

அவற்றில் பல பொதுமக்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த பழமையான லிப்ஸ்டிக் அருங்காட்சியகம் சென்றுடைந்துள்ளது.

பல கொள்ளை சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்து இருப்பதால் லிப்ஸ்டிக் தோன்றிய இடம் குறித்து சரியாக தெரியவில்லை. இருப்பினும் இது உலோக நாகரிக காலத்தை சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பண்டைய கால லிப்ஸ்டிக்கானது தற்கால லிப்ஸ்டிக் தயாரிப்பு முறைகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது, இது பழங்கால சமூகத்தின் ஒப்பனை நடைமுறைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
 

Leave a Reply