• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உத்தேச மின்சார சட்டமூலத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

இலங்கை

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேசமின்சார சட்டமூலத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 1969 ஆம் ஆண்டின் 17இலக்க இலங்கை மின்சாரசபை சட்டம், 2009 ஆம் ஆண்டி 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரசபை சட்டம் ஆகியன ரத்துசெய்யப்படும்.

இதன்படி புதிய சட்டமூலத்தின் ஊடாக மின்சாரசபையின் ஒரு சில பிரிவுகள் வகுக்கப்படவுள்ளதுடன் மின்சாரசபை தனியான நிறுவனமாக மேற்கொண்ட விடயங்கள் ஆறுபிரிவுகளின் அடிப்படையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது

இதன்படி மின்னுற்பத்தி, மின்விநியோகம், பரிமாற்றம், சந்தைப்படுத்தல், வழங்கல், கொள்முதல் ஆகிய 6 பிரிவுகளின் அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply