• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்... ஜப்திக்கு வந்த வீட்டை நினைத்து கவியரசர் எழுதிய ஹிட் பாட்டு -வீட்டை மீட்டாரா?

சினிமா

எம்.ஜி.ஆர் வேறு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தால், ஊமையன் கோட்டை படக்குழு எம்.ஜி.ஆர் இல்லாத அத்தனை காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படத்தை தொடங்கி பாதியில் நின்றுபோனதால், அதற்கு அடுத்து ஒரு படத்தை தொடங்குகிறார் கவியரசர் கண்ணதாசன், இந்த படம் பாதியில் நின்றுபோனது பலரும் அறியாத ஒரு தகவல்.

தான் எழுதிய ஊமையன் கோட்டை கதையை எம்.ஜி.ஆர் நடிப்பில் படமாக்க முடிவு செய்த கண்ணதாசன், அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். எம்.ஜி.ஆரும் கால்ஷீட் கொடுத்ததால் படப்பிடிப்பு தொங்கியுள்ளது. அப்போது எம்.ஜி.ஆர் வேறு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தால், ஊமையன் கோட்டை படக்குழு எம்.ஜி.ஆர் இல்லாத அத்தனை காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளனர்.

அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிக்கும் காட்சிகள் தொடர்பான அவரை சந்தித்தபோது, அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், இந்த படம் எடுத்தவரை அப்படியே விட்டுவிட்டார் கண்ணதாசன் இதன் காரணமாக பொருளாதார நெருங்கடியை சந்தித்தாலும், தனது தனித்துவத்தை நிரூபிக்கும் வகையில் தயாரித்த படம் தான் மாலையிட்ட மங்கை. இந்த படத்தில் தான் நடிகை மனோரமா நடிகையாக அறிமுகமானார்.

மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் பணிகள் அனைத்து முடிந்த நிலையில், படத்தை லாபம் இல்லாமல் தனது சகோதரர் ஏ.எல்.சீனிவாசனுக்கு கொடுத்துவிட்டோம். இந்த படத்தின் படத்தின் மூலம் அவருக்கு பெரிய லாபம் அடைந்த நிலையில். தனக்கு ஒரு ரூபாய் கூட லாபம் இல்லை என்று சினிமா சந்தை 30 ஆண்டுகள் என்ற தனது புத்தகத்தில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஊமையன் கோட்டை, மாலையிட்ட மங்கை ஆகிய 2 படங்களின் காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்த கண்ணதாசன், பீம் சிங் இயக்கத்தில் பாவ மன்னிப்பு என்ற படத்திற்கு பாடல் எழுத சென்றுள்ளார். அப்போது அவர், ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக அவர் நீதிமன்றம் சென்றதாகவும், நீதிமன்றம், கண்ணதாசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கண்ணதாசனுக்கு தகவல் கிடைக்கிறது.

மேலும் ஜப்தி செய்ய அதிகாரிகள் வீட்டு வாசலில் நிற்க, ஒருவர் வீட்டு வாசலில் நின்று தமுக்கு அடிக்கிறார் என்று கூறியுள்ளனர். நீ முதலில் ஒரு 10 ரூபாய் கொடுத்து அவனை தமுக்கு அடிக்க வேண்டாம் என்று சொல் நான் வந்துகொண்டே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பாடலை எழுத தொடங்குகிறார். இயக்குனர் பீம்சிங் சூழ்நிலையை செல்ல, அப்போது தனது நிலையும் அதுதான் என்று உணர்ந்த கண்ணதாசன், அந்த நேரத்தில் எழுதிய பாடல் தான் ‘’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், உடனடியாக ஒரு ஃபைனான்சியரை சந்தித்து பணம் பெற்று நீதிமன்றத்தில் கட்டி தனது வீட்டை மீட்டுள்ளார். இதனிடையே வீட்டுக்கு வெளியில் தமுக்கு அடித்த நபரை பார்த்த கண்ணதாசன் மகன் அந்த தமுக்கு வேண்டும் என்று அடம் பிடித்த நிலையில், கண்ணதாசனின் மனைவி அவரை அடித்துள்ளார். அப்போது வீட்டை காப்பாற்றிய சந்தோஷத்தில் வந்த கண்ணதாசன், மனைவியிடம் ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

வெளியில் தமுக்கு அடித்தவனிடம் இருந்து அதை வாங்கி கொடுக்கும்படி கேட்கிறான் என்று சொல்ல, கண்ணதாசன் லேசான புன்னகையுடன் உள்ளே சென்றுள்ளார். இந்த தகவலை அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply