• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்புள்ள ரஜினிகாந்த்

சினிமா

ரஜினிகாந்த் கேமியோ நடிப்பில் வெளியாகி இருந்த ’அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல ஹீரோ தானாம். ஆனால் நடக்காமல் போக கடைசியாக தான் ரஜினிகாந்த் இணைந்தார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல வசனகர்த்தாவும் தூயவனும், அழகன் தமிழ்மணியும் முதலில் மலையூர் மம்பட்டியான் படத்தை தயாரித்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை குவித்தது 200 நாட்களைத் தாண்டியும் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடியது. அந்த சமயத்தில் தூயவனும் அழகன் தமிழ்மணியும் டெல்லியில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

அங்கு டச் ஆஃப் லவ் என்ற படம் திரையிடப்பட்டது. இதில் எல்லிஸ் பிரஸ்லி என்ற பாப்பா நகர் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். படம் இருவரையும் வெகுவாக கவர்ந்து விட அதை தமிழில் தயாரிக்க முடிவு செய்கின்றனர். சென்னை திரும்பியவுடன் படத்தின் திரைக்கதையை அடுத்த ஒரு மாதத்திற்கு எழுதி முடித்தார்கள்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முதலில் இவர்கள் கேட்டது எம்ஜிஆரை தான். முதல்வராக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தூயவன் அவருக்கு கதை சொல்ல எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். படத்தில் நடிப்பதாக சொல்லியவர்.மற்ற விஷயங்களை அமைச்சர் அரங்கநாதனிடம் பேசிக்கொள்ளுமாறு அனுப்பி இருக்கிறார்.

அவரும் கதையை கேட்டுவிட்டு படத்தின் பெயரைக் கேட்க அன்புள்ள எம்ஜிஆர் என கூறியிருக்கிறார் தமிழ்மணி. ஆனால் அதுவரை படத்தின் டைட்டிலை முடிவு செய்யாமல் தான் படக்குழு இருந்து இருக்கிறது. அரங்கநாதனுக்கு பட கதை பிடித்து போக மிகப்பெரிய தொகையை கொடுத்த அதை வாங்கிக் கொள்ளவா என கேட்கிறார். 
 

Leave a Reply