• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாயிகள் இந்த நிலைமை தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்விநியோக பராமரிப்பு பணிகளில் தடை ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால், நாளாந்த நீர் தேவைகளை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளின் அவசியம் தொடர்பாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நுகர்வோர் 1939 எனும் தொலைபேசி இலக்கமூடாக தங்களின் பிரச்சினைகளை அறியத்தருமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிறுத்தியுள்ளது.
 

Leave a Reply