• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து வளர்ப்பு மகள் வெளிப்படை

பிரான்ஸ் நாட்டின் எதிர்கால ஜனாதிபதிக்கும் தமது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட அந்த அவதூறான நெருக்கம் தொடர்பில் முதல் முறையாக மனந்திறந்துள்ளார் இமானுவல் மேக்ரானின் வளர்ப்பு மகள். ஜனாதிபதி மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் ஆகியோர் தெரிந்துகொள்ள விரும்பாத தகவல்களை Tiphaine Auzière அம்பலப்படுத்தியுள்ளார். அந்த விலக்கப்பட்ட உறவால் ஏற்பட்ட காயங்களில் இருந்து தாம் தற்போதும் விடுபடவில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
  
Tiphaine Auzière தமது முதல் புதினத்தை வெளியிட்டுள்ள நிலையில், பரவலாக பேசப்படும் பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்தவர் என்ற கருத்துக்கும் பதிலளித்துள்ளார்.

தமக்கு 10 வயதாக இருக்கும் போது தான் தமது ஆசிரியரான தாயார் தன்னைவிட 25 வயது இளையவரான மேக்ரானை சந்திக்கிறார் என குறிப்பிடும் Auzière, திருமண உறவில் இருந்துகொண்டே பிரிஜிட் இன்னொரு விலக்கப்பட்ட உறவில் ஆர்வம் காட்டுவதை அவரது மூன்று இளம் பிள்ளைகளும் தொடர்ந்து கேட்க நேர்ந்தது என்றார்.

தற்போது 40 வயதாகும் Tiphaine Auzière தெரிவிக்கையில், அது சமூக ஊடகம் மலிந்த நாட்களல்ல, ஒரு குட்டி நகரம், ஒளிவு மறைவு ஏதும் இருப்பதில்லை.

பிரிஜிட் மற்றும் மேக்ரான் நெருக்கம் காரணமாக தலைகுனிவை எதிர்கொண்ட தமது தந்தை André-Louis Auzière வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேறும் நெருக்கடிக்கு 1994ல் தள்ளப்பட்டார் என்றும், 2006 வரையில் அவர் பிரிஜிட்டை விவாகரத்து செய்துகொள்ளவில்லை என்றும் Tiphaine Auzière குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் ஒன்று பிரிவது துயரமான நிகழ்வு மட்டுமல்ல ஒரு வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள Tiphaine Auzière தமக்கு ஒரு அன்பான தந்தையும் ஒரு வளர்ப்பு தந்தையும் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

68 வயதில், கடந்த 2019ல் தமது தந்தை இறந்தாலும், தற்போதும் தாம் தமது தந்தை குறித்து பேசுகையில் நிகழ்கால வினைச்சொல்லையே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தமது சகோதரி ஒருவர் இமானுவல் மேக்ரானுக்கு வகுப்பு தோழி என்றும், பிரிஜிட் உடனான அந்த விலக்கப்பட்ட உறவு மூன்று பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியை அளித்த விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply