• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடா

கனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.

கனடியப் பிரஜைகள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருப்பதனை விடவும் மாற்று வழிகளை பின்பற்றுவது உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோய் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு காத்திருக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு குடும்ப மருத்துவர்கள் அன்றி வேறும் சிகிச்சை நிலயங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்வதனால் ஏற்படும் செலவுகளை குடும்ப மருத்துவர் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் எந்த இடத்தில் நோயாளி வசிக்கின்றார் என்பதன் அடிப்படையில், குடும்ப மருத்துவர் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

என்ன காரணத்தினால் தனது நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதனை குடும்ப நல மருத்துவர் விளக்கமளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாது அருகாமையில் இருக்கும் சிகிச்சை நிலையங்களில் (Walk-in clinics) நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply