• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்

இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜெனிவா நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு இந்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளனர்.

ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பிலும் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச நாடுகளின்; மனித உரிமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீளாய்வு வாய்மொழிமூலமாக எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் அன்றைய தினம் கொலம்பியா குவாட்டமாலா ஹொண்டுராஸ் சைப்பிரஸ் நிக்காராகுவா உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 

Leave a Reply