• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரதி கண்ணம்மா என்கிற படம் மூலம் இயக்குனர் அவதாரம் 

சினிமா

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் சேரன். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் இவர். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். பாரதி கண்ணம்மா என்கிற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இந்த படத்தில் பார்த்திபன், விஜயகுமார், மீனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காதலுக்கு முன் சாதி என்பது ஒன்றுமில்லை என்பது போல படத்தின் இறுதிக்காட்சியை அமைத்திருந்தார் சேரன். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதன்பின் பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இவை எல்லாமே சமூக அக்கறை கொண்ட படங்கள்தான். ஆனால், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல நடிகர்களும் நடிக்க மறுத்த அந்த கதையில் சேரனே நடித்தார். ஒரு வாலிபனில் வாழ்வில் வரும் 3 காதல்களை அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்.

அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ஹிட் அடிக்கவில்லை. எனவே, முழுநேர நடிகராக மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். சமீபத்தில் இவரின் இயக்கத்தில் ஒரு வெப் சீரியஸும் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சேரன் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

பாரதி கண்ணம்மா படத்தின் ஹீரோவே விஜயகுமார்தான். ஒரு சாதி வெறி பிடித்த மனிதர் அந்த சாதியை தூக்கி எறிவதுதான் படத்தின் கதை. இந்த கதையை அவரிடம் சொன்னபோது கார்த்திக் சரியாக இருப்பார் என சொல்லி அவரிடம் பேசினார். நானும் கார்த்திக்கை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால், அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. இப்படியே 2 மாதங்கள் போய்விட்டது. தயாரிப்பாளர் மும்பை போய் தனது சொத்துக்களை விற்று கையில் 45 லட்சம் பணத்தோடு வந்தார். ஆனால், கார்த்திக் தனது கால்ஷீட்டை வேறு படத்துக்கு கொடுத்துவிட்டார். அதன்பின்னர்தான் அந்த படத்தில் பார்த்திபன் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவும் கதாநாயகியுடன் சேர்ந்து இறப்பது போல காட்சி வைத்தேன். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மாற்றிவிடுங்கள் என பார்த்திபன் சொன்னார். ஆனால், இதுதான் கிளைமேக்ஸ் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்’ என சேரன் கூறியிருந்தார்.
 

Leave a Reply