• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1950-1980 கால கட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் எனச் சொல்லுவோம்.. 

சினிமா

1950-1980 கால கட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் எனச் சொல்லுவோம்.. காரணம் இதில் அஷ்டாவதானி எனப்படும் எட்டுபேரின் பங்கு அப்படி..

எம்ஜிஆர், சிவாஜி, எம்எஸ்வி, கே.விஎம். டிஎம்எஸ்..கண்ணதாசன், வாலி ஆகிய ஏழு பேருடன்கொண்ட இன்னொருவர் பி.சுசீலா…

எந்த தமிழ் சினிமா ஹிட்டானாலும், அதில் இந்த எட்டு பேரில் ஒருவரின் பங்கு இல்லாவிட்டால்தான் ஆச்சர்யமே

தெலுங்கு தாய் மொழியாக இருந்தாலும், தமிழ் தாலாட்டி வளர்த்த இசையருவி.. பதிலுக்கு தமிழை தாலாட்டி எதிர் சேவை செய்த இசை எழிலரசி.

ஆந்திராவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி இசை பயின்றவர்.1950களின் துவக்கத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் ஏகப்பட்ட பின்னணி பாடகிகள் அப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்கள்.. அவர்களை மீறி வெளியே வருவதற்கு கடுமையாக போராட வேண்டியிருந்ததால் சில ஆண்டுகள் கழித்துதான் தமிழ் சினிமாவில் சுசீலாவுக்கு பிரேக்கே கிடைத்தது..

கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் இடையிடையே விக்கல் எடுப்பதுபோல் நக்கலுடன்பாடும்,” உன்னை கண் தேடுதே” என்ற பாடலை சுசீலா பாடிய விதம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து ஜிகே ராமநாதன் கேவி மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினாலும் சுசீலாவை பொறுத்தவரை அவருக்கு பட்டை தீட்டியவர்கள், ஏணி போல் திகழ்ந்தவர்கள் என்றால் அது மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான்..

1960களில் முழுக்க முழுக்க பெண் குரல் என்றால் அது பி சுசீலாதான் நம்பர் ஒன் என்ற அளவில் உயரத்திற்கு கொண்டுபோய் வைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்..

நூற்றுக்கணக்கான டூயட் பாட்டுகளை டிஎம்எஸ் உடன் சேர்ந்து பி சுசீலா பாடி வைத்தவை இன்றும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றன.

வசந்த மாளிகை படத்தின் மயக்கமென்ன இந்த மௌனமென்ன..  உலகம் சுற்றும் வாலிபன் பட பச்சைக்கிளி முத்துச்சரம்.. எவ்வளவு ஹிட் பாடல்கள் !

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு முறை பேசும் போது சொன்னார்.. நம்முடைய பி.சுசீலாவை தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்று பலரும் சொல்வதை குறிப்பிட்டு அவர் கோபப்பட்டார். வேண்டுமானால் லதாவை வடநாட்டு சுசீலா என சொல்லிக்கொள்ளுங்கள் என்று எம்ஜிஆர் ஆதங்கப்பட்டாராம்.

#அம்மையாரின் பாடல்களில் என்றும் என்றும் என் நெஞ்சில் நிலைத்து  நிற்பது  ' மாலைப் பொழுதின் மயக்கத்திலே ....

Sampatth Kumar

Leave a Reply