• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை விவகாரம் - கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொது செயலாளலர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் ஹர்ச டி சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ராத்நாயக்க இணைந்தமை தொடர்பாக சரத் பொன்சேகா எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த நிலையில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ள வெளியான தகவலை தொடர்நதே வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சரத் பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply