• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரைப் பதவி நீக்குமாறு கோரிக்கை

இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானாவை பதவியிலிருந்து நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதா சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையில், சுகாதாரத் தொழிற்சங்கங்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தில் சிறு பணியாளர்கள் ஈடுபட்டமையை வைத்தியர் பெல்லனா கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனவே அவர் பதவியில் இருப்பது பொருத்தமானது அல்ல என்றும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பெல்லனாவை பதவியில் இருந்து அகற்றும் வரை, அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply