• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய சேவையை அறிமுகப்படுத்தியது Alliance Finance

இலங்கை

வாடிக்கையாளர்களின் நலன்கருதி வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் செய்முறையை இலகு படுத்தும் நோக்கில் புதிய பரிமாற்ற வசதியினை எலைன்ஸ் பைனான்ஸ், நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

எலைன்ஸ் பைனான்ஸ், (Alliance Finance) நிறுவனத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட AFC ரெமிடன்ஸ் (Remittance) சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 07ஆம் திகதி கொழும்பு, இராஜகிரியவில் எலைன்ஸ் பைனான்ஸ் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாடிக்கையாளர்களின் நலன்கருதி வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் செய்முறையை இலகு படுத்தும் விதமாக எலைன்ஸ் பைனான்ஸ் (Alliance Finance)  நிறுவனமானது வெஸ்டர்ன் யூனியன், மணி கிராம் மற்றும் ரியா சேவையுடன் இணைந்து AFC  ரெமிடன்ஸ் (Alliance Finance) என்ற புதிய பணப்பறிமாற்றச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் எலையன்ஸ் நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதித் தலைவருமான ரொமானி டி சில்வா, பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் குசல் ஜயவர்தன, பிரதம வர்த்தக அதிகாரி அஜந்தகுமார, யுகுஊ நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply