• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓரே படத்தில் ஓஹோவென ஹிட் கொடுத்த இயக்குநர்.. குடியால் விஜய் படத்தை தவற விட்ட பரிதாபம்

சினிமா

1990-களில் உருக வைக்கும் காதல் படங்கள் என்றாலே நினைவுக்கு வரும் நடிகர் தான் முரளி. இதயம், பகல் நிலவு, கனவே கலையாதே, காலமெல்லாம் காதல் வாழ்க போன்ற உணர்ச்சி ததும்பும் காதல் படங்களில் நடித்து 90-களின் இளைஞர்களின் காதல் நாயனாகத் திகழ்ந்தவர்.

இவர் நடிப்பில் மற்றுமொரு அற்புதம் செய்த படம் தான் தினந்தோறும். மெல்லிய காதல் கதையைக் கொண்ட இப்படத்தினை இயக்கியவர் நாகராஜ். முதல் படத்திலேயே அனைத்து தரப்பும் ரசிக்கும் வண்ணம் அற்புதமான காதல் கதையைக் கையில் எடுத்து அதில் முரளியை நாயகனாக்கி வெற்றி கொடுத்தவர்.

அந்தப் படத்தைப் பார்த்து விட்டு பூமா மாதிரி ஒரு காதலி நமக்கு கிடைக்க மாட்டாளா என்று ஏங்காத இளைஞர்களே இல்லை எனலாம். படத்தின் காட்சிகள், வசனங்கள், கேரக்டர்கள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. “என் வானம் நீதானா” பாடல் ஒலிக்காத வீடே இல்லை… தினந்தோறும் நாகராஜ் என இயக்குனரின் பேரே மாறிப்போனது வரலாறு. ஆனால் அதன் பிறகு அந்த இயக்குனர் காணாமல் போனார். அந்த காலகட்டத்தில் முதல் படம் வெற்றி கொடுத்த இயக்குனர்கள அடுத்தடுத்து படம் செய்து தங்களை நிரூபிக்க, நாகராஜ் மட்டும் என்னவானார் என்றே தெரியவில்லை.

அடுத்து தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் குடியால் பல நல்ல பட வாய்ப்புக்களை இழந்தார். மேலும் விஜய் நடிப்பில் உருவாக இருந்த படத்தை இயக்கும் வாய்ப்பினையும் இழந்தார்.

தொடர்ந்து கவுதம் மேனனிடம் கதை விவாதங்களில் பங்கெடுத்து மின்னலே, காக்க காக்க போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். இருப்பினும் அவரால் சினிமாவில் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை. பல திறமைகள் இருந்தும் குடிப்பழக்கம் அவரது வாழ்க்கையை வீணடித்தது.

தற்போது குடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரே சொல்வது போல் இது மறுஜென்மம் தான். சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் வாழ்வின் இருட்டுப் பக்கங்களை ஒளிவுமறைவின்றி பேசுகிறார்.  ஓரிரு படம்தான் என்றாலும் அந்தப் படத்திலும் நெகட்டிவ் கேரக்டரே கிடையாது என்பது நினைவில் வந்து போகிறது. மணிவண்ணன் கேரக்டர் கூட வில்லனைப் போல வந்தாலும், இறுதியில் அட்டகாச மெசேஜ் சொல்லிவிட்டுப் போகும். ரேணுகா கேரக்டர் கத்தி மேல் நடக்கும் கேரக்டர். அவர் பேசப்பேச இவையனைத்தும் அவர் பேச பேச தினந்தோறும் படம் மனதில் வந்து போகிறது.

தேன்மொழி

Leave a Reply