• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

இலங்கை

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்குள் இலங்கை தற்போது பிரவேசித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

இதேவேளை அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கும் இலங்கை தனது சந்தையை விரிவுபடுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உற்பத்திச் செலவைக் குறைத்தல், அறுவடைக்குப் பின்னரான சேதங்களைத் தடுப்பது மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைப்பதில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிறைவுப் பொருளாதார அமைப்பிற்குத் தேவையான புதிய தொழில்நுட்ப அறிவும், சிறுதொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான ஆதரவும் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply