• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் வேணு அரவிந்த்

சினிமா

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் இவர் இருந்த காலத்தில் அனைத்து குடும்ப மனைவிகளுக்கும் பிடித்தமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் வேணு அரவிந்த். இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைக்கலயே என்று ஏங்காத பெண்களே இல்லை. ஆங்கிலம் கலந்த தமிழில் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிக்கும் படியாக அமைந்தது.

பல சீரியல்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கியவர். இவரை பற்றி சிறிய வருத்தம் என்னவெனில் வெள்ளித்திரை இவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான். இவரின் நடிப்பு கிட்டத்தட்ட எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ஒத்தே காணப்படும்.

இதையும் படிங்க: ரொம்ப உருட்டுறீங்க மக்கா!… சீக்கிரம் இந்த சங்கமத்த முடிச்சி விடுங்களேன்..கடுப்பான ரசிகர்கள்

கொரானா சமயத்தில் வேணு அரவிந்திற்கு கொரானா தொற்று ஏற்பட அது நிம்மோனியாவில் போய் விட்டிருக்கிறது. அப்போது மூளையில் ஏதோ கட்டி வர அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள். அதன் பிறகு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்று விட்டார். கிட்டத்தட்ட 4, 5 வருடங்கள் அவரை சீரியலிலேயே பார்க்க முடியவில்லை.

ஆனால் இப்போது பூர்ண குணமாகி மீண்டும் ராதிகா தயாரித்து நடிக்கும் ஒரு சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் வேணு அரவிந்த். டிடி தொலைக்காட்சிக்காக ராதிகா தயாரிக்கும் சீரியல் ‘தாயம்மா குடும்பத்தார்’. அந்த சீரியலில் ராதிகாவுடன் வேணு அரவிந்த் , மகாலட்சுமி, பூவிலங்கு மோகன், அர்ஜூன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில் வேணு அரவிந்த் ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: எப்படி இப்படிலாம் படம் பண்றீங்க?!.. நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!. எஸ்.கே-வை ஃபிளாட் ஆக்கிய ரஜினி…

அவர் கொடூரமான வில்லனாக நடித்த சீரியல் ‘அலைகள்’. அந்த சீரியல் மூலம் தான் வில்லனுக்கு உண்டான பவரே வெளியில் தெரிய ஆரம்பித்தது. என்னால்தான் இந்த மாதிரி கேரக்டர் பல சீரியலில் உருவாக காரணமாகிவிட்டது. அதுவே எனக்கு ஒரு குற்ற உணர்வாகிவிட்டது. அதுவும் வரும் சீரியல்கள் ஆண்களை விட பெண் வில்லிகள்தான் அதிகமாக வருகிறார்கள்.

அலைகள் சீரியலில் நடிக்கும் போது என்னை மிகவும் கெட்டவனாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஷூட்டிங்கில் இருந்த போது ஒரு சில பெண்கள் என்னைப் பார்த்து மண்ணை அள்ளி தூற்றி வீசினார்கள். ஒரு வேளை அது கூட என்னுடைய இந்த நிலைக்கு காரணமாகியிருக்கலாம். அதனால் இனிமேல் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறேன் என வேணு அரவிந்த் கூறினார்.
 

Leave a Reply