• Welcome to TamilsGuide
செய்திகள் 1

72 வயது இளைஞன் டயட் ரகசியம்

சினிமா

72 வயது இளைஞன். டயட் ரகசியம் தேடிப் பார்த்தேன். அசைவம் எண்ணை குறைவாக, மிக அளவுடன் எடுத்துக் கொள்கிறாராம். தனியாக சமையல்காரர் உண்டு. இரவு உணவு 7 மணிக்கு முன். அதோடு பரந்த வாசிப்பு, சரியான உறக்கம், தினசரி உணவு ஒழுக்கம். இது தான் மம்முட்டி. இளமைக்கு இது மட்டும் காரணமல்ல,

ஆர். கே செல்வமணியின் மக்களாட்சி படப்பிடிப்பில் இரவெல்லாம் காக்க வைத்து, சீன் எடுக்கவில்லை என்ற கோபத்தில் கிளம்பி விட்டாராம். அவரை அழைப்பதற்கு பதில் அதிகாலை நான்கு மணிக்கு மம்முட்டியின் மனைவியை அழைத்து நிலையை விளக்கியிருக்கிறார் செல்வமணி. நீங்க ஷாட் ரெடி பண்ணுங்க சார் என சொல்லி போனை வைத்திருக்கிறார் மம்முட்டியின் மனைவி சுல்பாத் குட்டி. 

மம்முட்டியின் கார், பத்தே நிமிடத்தில் பாதி வழியில் திரும்பி, ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறது. கோபமாக சென்றவர் சிரித்தபடியே இறங்கி காட்சிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். இளமை நீடிக்க கவலையற்ற வாழ்வு வேண்டும், தன்னை நம்பி கரம் பிடித்தவளை நம்பியவருக்கு, அவள் சொல்லை மதிப்பவருக்கு என்றும் இளமை நிச்சயம்.  

மம்முட்டி 100 வயதானாலும் இப்படித்தான் இருப்பார்.

Hariharasuthan Thangavelu

Leave a Reply