• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம் - பெண் எடுத்த அதிரடி முடிவு 

அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர், தனது உடமைகளை விற்று தண்ணீர் இல்லாத கேபினில் வசிக்கிறார். வாஷிங்டனில் வசித்து வந்த Lauren Hurst (29) என்ற பெண், ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர், வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஒரு புதிய தொடக்கம் வேண்டும் என முடிவு செய்தார். அதாவது, நாட்டை விட்டு வெளியேறி தொலைதூரத்திற்கு சென்று வாசிக்க வேண்டும் என நினைத்தார் Lauren Hurst.
 
தான் செல்லும் பாதை தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதை உணர்ந்த Lauren Hurst, தன்னை தேடும் பயணத்தை தொடங்கினார்.

அதற்காக இவர் அலாஸ்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு பிரபலமான Dry Cabin எனும் தண்ணீர் வசதி இல்லாத சிறிய வீடு போன்ற அமைப்பை வாடகைக்கு எடுத்தார். இதற்காக Lauren Hurst தனது உடைமைகளை விற்றுவிட்டார்.

தற்போது வாடகைக்கு எடுத்த வீடு மற்ற வீடுகளை விட குறைவான விலை குறைவானது என கூறும் அவர், அதிக வாடகை செலவுகள் நிதி நெருக்கடியின்றி இருக்க இந்த முடிவை எடுத்தாராம்.

Lauren Hurst அலாஸ்காவில் வசிப்பது பல உயர்நிலைகளுடன் வருகிறது, அத்துடன் சில தாழ்வுகள் போன்றவற்றை தனது TikTok கணக்கில் ஆவணப்படுத்தியுள்ளார். அவரை தற்போது 197,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

Cabin-யில் எப்படி தண்ணீர் கிடைக்கிறது என்பதை Lauren Hurst ஒரு வீடியோவில் காட்டியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு ஒருமுறை நகரத்திற்கு சென்று, அங்குள்ள நீர் நிலையத்தில் இரண்டு Enormous Jugs-களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருகிறார்.

அலாஸ்காவில் வசிப்பதை சாகச முயற்சியாகவே Lauren Hurst பார்க்கிறார். ஏனெனில், அங்கு பல சிரமங்களை எதிர்கொள்கிறார். அதாவது அங்கு மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.

இதுகுறித்து Lauren Hurst வீடியோவில் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை அலாஸ்காவிற்கு செல்வது சங்கடமாக இருந்தது. கொஞ்சம் கடினமான சூழலில், கூடுதல் முயற்சி தேவைப்படும் வாழ்க்கை முறையை அனுபவிப்பதன் மூலம் எனது தனிப்பட்ட வரம்புகளை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் தள்ள விரும்பினேன்' என தெரிவித்தார். 
 

Leave a Reply